search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்"

    • கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    மும்பை :

    வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடுதழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

    இதனால், இன்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை முடங்கும் அபாயம் நிலவியது.

    இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று மீண்டும் மும்பையில் தேஜ்பகதுர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    27-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர்.

    கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக, வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது.

    இந்திய வங்கிகள் அமைப்பு, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

    அதில், வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
    • சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

    ஐதராபாத் :

    வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்பட்டால் மக்களின் பண, காசோலை பரிமாற்ற நடவடிக்கைகள் கடுமையாக தேக்கம் ஏற்படக்கூடும்.
    • ஏ.டி.எம். சேவைகள் இருந்தாலும் கூட அவை முழுமையான அளவு செயல்படும் என்று கூற இயலாது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதிய உயர்வு, பென்சன் உயர்வு வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்த போவதாக மத்திய அரசுக்கு சங்கங்கள் நோட்டீசு கொடுத்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4 நாட்கள் வங்கிகள் மூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    30 மற்றும் 31-ந்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 28 மற்றும் 29-ந்தேதி வங்கி விடுமுறையாகும். விடுமுறை நாட்களை தொடர்ந்து போராட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தொழில், வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்பட்டால் மக்களின் பண, காசோலை பரிமாற்ற நடவடிக்கைகள் கடுமையாக தேக்கம் ஏற்படக்கூடும். ஏ.டி.எம். சேவைகள் இருந்தாலும் கூட அவை முழுமையான அளவு செயல்படும் என்று கூற இயலாது.

    இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாஜலம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுகிறது. அதனால் போதுமான அளவிற்கு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம.

    சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் நடைபெறும். 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    மும்பை :

    வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் கூட்டம் மும்பையில் நடந்தது. அதில், இம்மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இம்மாதம் 28-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதாலும், 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாட்கள் ஆகும். அதைத்தொடர்ந்து, 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் நடப்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணை பொதுச்செயலாளர் நரேந்திர சவுகான் கூறியதாவது:-

    சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தில் மாற்றம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், புதிய ஊழியர்கள் தேர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

    இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் புறக்கணித்ததால், வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
    • நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில் வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ம் தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டிருந்தது.

    நாளை 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, வங்கி வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • அவுட் சோர்சிங் மூலம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • கீழ்நிலை பணியாளர்கள் நியமனத்துக்கான வாய்ப்பையும் குறைக்கும்.

    புதுடெல்லி:

    வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர்.

    இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    அவுட் சோர்சிங் மூலம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கீழ்நிலை பணியாளர்கள் நியமனத்துக்கான வாய்ப்பையும் குறைக்கும்.

    சில வங்கிகள் தொழிலக சச்சரவுகள் திருத்த சட்டத்தின் விதிகளை மீறி செயல்படுகின்றன. பணியாளர்களை கட்டாயமாக பணியிட மாற்றம் செய்கின்றன. சில வங்கிகளின் தன்னிச்சையான முடிவுகளால் இரு தரப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மீறப்படுவதோடு பணி மற்றும் பணிப் பாதுகாப்பில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    பழிவாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை வெளிப்படுத்த போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை தவிர வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி அதிகாரிகள் பங்கேற்கவில்லை. ஆனாலும் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிக் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு இருக்கலாம் என்று சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளன.

    • வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன.
    • இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    அவுரங்காபாத்

    அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன.

    இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.

    பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்-திருப்பத்தூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    அனைத்து பொது வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் வங்கிகளை இணைக்ககூடாது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை விரைவுபடுத்த கோரியும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரியும் வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர் அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து பொது வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சம்பத்குமார், ரஜனி முன்னிலை வகித்தனர். கோபால், விஜயகுமார், கார்த்திகேயன், ஆனந்தன், சோமசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட்வங்கி முதன்மை வங்கி மேலாளர் கே.கே.மணி தலைமை வகித்தார் இந்தியன் வங்கி நவீந்திரன் வரவேற்றார். பாரத வங்கி புகழேந்தி இந்தியன் வங்கி கணேஷ் கனரா வங்கி ரமேஷ் விஐயாவங்கி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் விஜயா வங்கி ஞானசவுந்தரி வங்கி மேலாளர்கள் கோதண்டம் சார்லஸ் துனண மேலாளார்கள் சதிஷ் சுஜின் மதிவாணன் சரவணன் ரஞ்சித் உட்பட பலர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கனரா வங்கி வைத்திஸ்வரி நன்றி கூறினார்.

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு  சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். 

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.  வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு வங்கிகளை பொதுவுடமை ஆக்குவதை கைவிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி குருநாதன், அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரி சங்க நிர்வாகி மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 3500 வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 14 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். #BankStrike
    சென்னை:

    பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்த 21-ந்தேதி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    வங்கி ஊழியர்கள் ஏற்கனவே வேறு சில பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், வங்கி ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகியவை வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.

    இதில் சுமார் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 14 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் முடங்கின. கடந்த 21-ந்தேதி நடந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.


    ஆனால் இன்று நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கிகளின் பணிகள் 100 சதவீதம் நடைபெறவில்லை.

    தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகள் அனைத்தும் இன்று முடங்கின. எந்தவித பணியும் நடைபெறவில்லை.

    தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படாததால் சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை பணபரிவர்த்தனை பாதிப்புக்குள்ளானது. பல ஊர்களில் ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்தியாவில் தினமும் வங்கிகள் மூலம் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி காசோலை பணபரிவர்த்தனை நடைபெறும். காசோலை பணப்பரிவர்த்தனை இன்று நாடு முழுவதும் நடக்கவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான காசோலை பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை.

    இது தனியார் தொழில் நிறுவனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர்களும் இன்று வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும், பணம் செலுத்த முடியாமலும் அவதிக்குள்ளானார்கள்.

    வங்கி ஊழியர்கள் எந்த வித கணக்குகளையும் பார்க்க மறுத்து விட்டதால் ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகளிலும் பாதிப்பு காணப்பட்டது. அரசாங்க கருவூல கணக்குகளிலும் வங்கி ஸ்டிரைக்கின் தாக்கத்தை உணர முடிந்தது.

    வங்கி அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி ஸ்டிரைக் செய்ததைத் தொடர்ந்து 22, 23-ந்தேதிகளிலும் வங்கிப் பணிகள் முடங்கின. நேற்று முன்தினம் மட்டும் மீண்டும் வங்கி சேவைகள் நடந்தன.

    நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காரணமாக வங்கிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று வங்கி பணிகள் முடங்கி உள்ளன.

    கடந்த 20-ந்தேதிக்கு பிறகு 6-வது நாளாக வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியான வங்கி சேவை முடக்கம் காரணமாக மக்கள் மத்தியில் பாதிப்பு அதிகரித்துள்ளது. #BankStrike
    விடுமுறை முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (21-12-2018) அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.  விடுமுறைகள் முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு இன்று வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

    பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


     
    தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். #BankStrike

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.

    22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. 



    26-ந் தேதி புதன்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike

    ×